கனடா விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவகுமார் பலி!!
கனடாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 22ம் திகதியன்று அதிகாலை மொன்றியல், பார்க் அவென்யு மற்றும் மில்டன் வீதி சந்திப்புக்கு அண்மித்த பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வீதியை கடக்க முற்பட்ட வேளையில் டாக்ஸி மோதியதில் படுகாயம் அடைந்த நபர் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் 63 வயதான சின்னதம்பி சிவகுமார் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

