Vampan memesபுதினங்களின் சங்கமம்

உலகமே பயப்படும் கொரோனா வைரசை மட்டக்களப்பு கொண்டு வரமுயலும் வைத்தியர்கள்!!

உலகமே கொரோனாவை கண்டு பதைபதைக்கும் போது,அதனை விலைகொடுத்து மட்டக்களப்பிற்கு கூட்டிவந்து பணம்பார்க்க நினைக்கும் மருத்துவ மாயியாக்கள்!

உலகம் கொரோனாவினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.இதுவரை உலகில் பதிவாகிய மரணங்கள் ஆயிரத்தை தாண்டுகிறது.

பாதிக்கப்பட்டோர் தொகை உலகளாவிய நிலையில் இலட்சங்களாக மாறுகிறது.

எல்லா நாடுகளும் கொரோனாவில் இருந்து தப்பிக்க படாதபாடு படுகின்றன.பயத்தின் மிகுதியால் கொரோனாவை தடுப்பதற்கான திட்டங்களை மிக வேகமாக சகல நாடுகளும் தயாரிக்கின்றன.

உலக சுகாதார ஸ்தாபனம் இந்த நோய் தாக்கத்தை பெரும்பரப்பு(pandemic) தொற்றுநோயாக அறிவிப்பது குறித்து பரிசீலித்துவருகின்றது.

நிலமை இவ்வாறிருக்க,மட்டக்களப்பை சேர்ந்த சில மருத்துவ வியாபாரிகள் தமது தொழிற்சங்கமூடாக சுகாதார அமைச்சுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

அதாவது,தொன்கொரியா இந்த கொரோனா வைராசினால் பாதிக்கப்பட்டுவரும் நாடுகளில் இறுதியாக சேர்ந்துள்ளது.அங்கே இலங்கை பிரஜைகள் 20000 ற்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

அவர்களை நாட்டுக்கு கொண்டுவரும் தீர்மானத்தை மேற்கொண்டு அவர்களை மட்டக்களப்பிற்கு கொண்டுவந்து மாந்தீவிலுள்ள தொழுநோயாளருக்குரிய வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கவேண்டும் என்பதே அந்த விண்ணப்பம்.

இந்த விண்ணப்பத்தை தமது அரச மருத்துவ சங்கத்தினூடாக எழுத்து மூலமான விண்ணப்பமாக மட்டக்களப்பை சேர்ந்த வைத்தியர் அழகையா லதாகரன் அவர்களும்,வைத்தியர் அச்சுதன் அவர்களும், வைத்தியர் சிறிக்காந் அவர்களும் தற்போது கறடியனாறு வைத்தியசாலையில் கடமையாற்றும் சிங்கள இனத்தை சேர்ந்த வைத்தியர் ஒருவருமாக சேர்ந்து செய்துள்ளனர்

மேற்குறிப்பிட்ட அனைத்து வைத்தியர்களும் ஒரு வகை மருத்துவ மாபியாக்களின் முதலாளிகள்/ தலைவர்கள்.இவர்களது மருத்துவ வியாபாரம் மட்டக்களப்பில் கொடிகட்டி பறக்கிறது.

மட்டக்களப்பிற்கு அழைத்துவரப்படும் நபர்களில் தொற் றுக்குள்ளானவர்கள் இருந்தால் அவர்களிலிருந்து மிக இலகுவாக அந்த கொரோனா வைரஸ் மற்றவர்களை சென்றடைய வாய்ப்புகள் உண்டு.

நோயாளர்களை மாந்தீவிற்கு கொண்டு செல்வதானால்,அங்கு தரை பாதைகள் இல்லை.நீர்வழிப் பயணங்களை மேற்கொண்டுதான் மாந்தீவை அடையமுடியும்.

மாந்தீவு ஓர் பறவைவைகள் சரணாலயம்.மட்டக்களப்பு நகரை அண்மிக்கும் பெரும்பாலான பறவைகள் மாந்தீவில்தான் ஓய்வெடுக்கின்றன.சீனாவின் அறிக்கைகளின்படி வௌவாலை உண்கொண்ட புடையன் பாம்பை சீனர்கள் உணவாக கொண்டமையால்தான் கொறோனா பொருக்கெடுத்தது என கூறப்படுகின்றது.

மாந்தீவிலும் வௌவால்கள் ஏராளமாக வாழ்கின்றன.அவை உணவு தேடி நகர்ப்புற பழமரங்களை நாடுகின்றன.அவை பழங்களையும் காய்களையும் உண்டு வாயினால் மீண்டும் வெளியேற்றும் கழிவுகளில் சுவாச மூலமும்,வாயின் சுரப்புகள் மூலமும் சேர்ந்துகொள்ளும் கொரோனா வைரஸ் இலகுவில் மனிதனை சென்றடையும்.

மொத்தத்தில் மட்டக்களப்பு நகரமே இழுத்துமூடப்படுமளவு நோய்த்தாக்கத்திற்குள்ளாகும்.இந்த சூழலை பயன்படுத்தி அதியுச்ச பண அறுவடையை செய்யவே இந்த மருத்துவ மாபியாக்கள் திட்டமிடுகின்றனர்.

மாந்தீவுக்கு கொண்டுவரப்படுபவர்கள்நோயற்றவர்களாக இருந்தால்கூட,மட்டக்களப்பில் கொரோனா குறித்த பீதி நிலையை உருவாக்கி அதன் மூலம் சிலபல பரிசோதனைகளை கட்டாயம் செய்யவேண்டும் எனும் கருதுகோளை தமது முகவர்கள் மூலம் அறிமுகம் செய்து,அந்த பரிசோதனைகளிலும் இவர்களால் இலாபம் பார்க்க முடியும்.

இவை தவிர முகவுறைகள்,சில நுண்ணுயிர்கொல்லி மருந்துகள் போன்றவற்றை விற்பனை செய்தும் இலாபமீட்டும் திட்டம் இவர்களிடமுள்ளது.

எனவே இந்த மருத்துவ மாபியாக்களை மக்கள் விரைவில் துரத்தியடிக்க வேண்டும்.மாந்தீவு குறித்து ஏதுமறியாதிருந்த சுகாதார அமைச்சையும் அதன் அதிகாரிகளையும் மட்டக்களப்பை நோக்கி கவனம்கொளச் செய்துள்ள இந்த விபச்சாரிகளுக்கொப்பான மருத்துவ மாபியாக்களின் முயற்சிகளை தடுத்து நிறுத்த மட்டக்களப்பின் புத்தியாளர் சமூகம் முன்வரவேண்டும் என சமூகவலைத்தளங்களில் கடும் விமர்சனப் பதிவுகள் வெளியாகியுள்ளன.

Image may contain: 1 person, standing

Image may contain: 1 person, outdoor, text and nature