கிளிநொச்சியில் வடிவேலு பாணியில் போடப்பட்ட வீதி!! அதிர்ச்சிக் காட்சிகள் இதோ (Photos)
கிளிநொச்சியில் கம்பெரலிய திட்டத்தில் புனரமைக்கப்பட்ட வீதி ஒரு வருடம் ஆகும் முன்னர் சேதமடைந்துள்ள நிலையில் மோசடி இடம்பெற்றிருக்கலாம் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் ஆதரவாளர் ஒருவராலேயே இந்த வீதி பொறுப்பு எடுக்கப்பட்டு திருத்தப்பட்டுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் இவற்றை கவனத்தில் எடுக்கத் தவறினால் மீண்டும் சிறிதரன் இப்படியான அலங்கோலங்களை செய்வார்.
கிளிநொச்சி, திருவையாறு மைதான வீதியில் முன்பள்ளி, கிராம சேவையாளர் அலுவலகம் உள்ளிட்ட பல தேவைகளை மக்கள் அன்றாடம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஒரு வருடம் ஆவதற்கு முன்னர் வீதி இவ்வாறு சேதமடைந்துள்ளது.
பாரிய நிதியில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தில் மோசடி இடம்பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்ட குறித்த வீதிக்கான ஒப்பந்தத்தினை அரச ஊழியர் ஒருவர் பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறித்த வீதி பாரிய நிதியில் அபிவிருத்திசெய்யப்பட்ட போதிலும், உரிய முறையில் அபிவிருத்தி மேற்கொள்ளப்படவில்லை எனவும், கண்காணிப்புக்கள் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கும் மக்கள், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரியுள்ளனர்.
மேலும், இந்த வீதி புனரமைப்பின் போதான மோசடி தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஊடாக உண்மை வெளியாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





