முல்லைத்தீவில் 7 வயதுச் சிறுவனை கொடூரமாக அடித்த தாய் கைது!! வீடியோ
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் இளம் தாய் ஒருவர் தனது வீட்டில் தனது 7 அகவை மகனிற்கு புத்தக பாடங்களை கற்றுக்கொடுக்கும் போது மகனை கொடூரமாக தாக்கிய காணொளி கிராம மக்களால் எடுக்கப்பட்டு வெளியானதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த தாயாரை கைது செய்துள்ளார்கள்.
பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்டமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
25 அகவையுடைய இளம் தாயார் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்து 5 மாத கைக்குழந்தையுடன் வாழ்ந்து வருகின்றார், அவரின் முதலாவது கணவனுக்கு பிறந்த 7 அகவையுடைய பாடசாலை சிறுவனுக்கு பாடம் கற்பித்து கொடுக்கும் போது தடியால் தாக்கியுள்ளார்.
குறித்த காணொளி கிராம மக்களால் எடுக்கப்பட்டு வெளியானதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு போலீசாரால் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பொலீசார், தாயை 22.03.2024 நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
என்றாலும் ஒரு தாயார் தனது மகனை குழப்படி செய்யாமல் படிக்க சொல்லி தண்டிப்பது தவறு என்று கூறமுடியாது.. இருந்தாலும் அளவுக்கு அதிகமாக தண்டிக்கப்படால் அது உயிர் ஆபத்தை ஏற்படுத்தும்.