யாழ்ப்பாணத்திலிருந்து கனடாவுக்கு கள்ளு ஏற்றுமதி செய்யும் சுகந்தன்!! யார் இவர்??

கடந்த 1973 இல்,ஒரு வசதியான யாழ்ப்பாணக் குடும்பத்தில் பிறந்தவர் சுகந்தன்.மாமாவின் உதவியுடன் 1989 இல், தனது 16 வயதில்,கனடா சென்றார்.

தாயின்சேலைக்குள் வளர்ந்த சுகந்தனின் வாழ்க்கை ரொறோண்டோவில் ஓய்வற்ற வேலை என்ற நிலைக்கு மாற்றம் பெற்றது. பாடசாலை, பகுதிநேர கோப்பை கழுவுதல், கிரிக்கெட் என்று நேரத்தை வசப்படுத்தித் தன் வாழ்வைச் சிரமத்தின்மத்தியிலும் கொண்டு சென்றார்.

சுமார் ஒன்றரை வருடங்களுக்கு வாரம் முழுவதும் நான்கு வேலைகளாற் பிரித்தெடுக்கப்பட்டன. தளபாடத் தொழிற்சாலை வேலை முழு நேரமாகியது.அதுவே சுகந்தனது வாழ்வுக்கும் ஏணியானது.

இரவுக்கல்லூரியில் எலெக்ட்றோணிக் எஞ்சினியரிங்க் கற்றாலும் ஒழுங்காக வகுப்புக்களுக்குப் போவதில்லை. நண்பர்களின் குறிப்புகளை வாசித்து அவர்களை விட மேலதிகமான புள்ளிகளைப்பெற்றார்.

இருப்பினும் அவர்களைப் போல் வருடம் 30,000 கனடியடொலர்களை அவர் சம்பாதிக்க விரும்பவில்லை.அவர் கல்வி கற்கும்போதே வருடம் 80,000 கனடியன் டாலர்களைச் சம்பாதித்துக் கொண்டிருந்தார்.

சுகந்தனதுதளபாடத் தொழிற்சாலை நிர்வாகம் அவரது திறமையை விரைவிலேயே இனம் கண்டு அவருக்குப்பதவியுர்வும் கொடுத்தது. பகுதி நேர வேலைகள் அவசியமில்லாமற்போனது.

சுகந்தன் இந்நிறுவனத்தில் 20 வருடங்கள் பணி புரிந்தார். இக்காலத்தில்கனடாவிலும், அமெரிக்காவிலும் சொத்துக்களில் முதலீடு செய்தார். தாயையும் ஒரு தம்பியையும் கனடாவுக்குஅழைக்க மற்றத் தம்பி அகதியாக ஐரோப்பாவுக்கு ஓடத் தங்கை மட்டும்திருமணம் முடித்து யாழ்ப்பாணத்திலேயே தங்கி விட அவரது கடமைகள்ஓரளவு திருப்தியுற்றன.

25 வருடங்களுக்குப்பிறகு, 2014 இல் சுகந்தன் யாழ்ப்பாணம்திரும்பினார். மனைவிக்கு விருப்பமில்லை எனினும் அவரது கனவு வேறாக இருந்தது.சரி வராவிட்டால் திரும்பி வரலாம் என்ற வாக்குறுதியோடு யாழ்ப்பாணம்சென்றார் சுகந்தன். ஏன் யாழ்ப்பாணம் திரும்பினாய்என்று கேட்டதற்கு “எனது பிள்ளைகள் தமது வேர்களை அறிய வேண்டும்” என்றார். மகன் தற்போது கனடாவில் பல்கலைக்கழகத்தில் பயில்கிறார். மகள் யாழ்ப்பாணத்தில் படிக்கிறார்.

சுகந்தன் தனது முதலாவது தொழில் முயற்சி தன் தங்கையின் கணவருடன்சேர்ந்து ‘றிச் லைஃப்’ (Rich Life) என்ற நிறுவனத்தின் வடமாகாண விநியோகிஸ்தராகியது. ‘றிச் லைஃப்’, முன்னணி பாலுணவுப் பொருட்களின் தயாரிப்பாளராவர். நான் சுகந்தனைச் சந்திக்குமுன்பேஇப் பொருட்களை வாங்குபவன். வட மாணத்தின் சகல கடைகளிலும் கிடைக்கும் இப் பொருட்கள் கிடைக்கின்றன.

இதன் பிறகு சுகந்தனின் கவனம் வரணி பனஞ் சாராயக் கூட்டுறவுச் சங்கத்தின் பக்கம் திரும்பியது.வரணி வடிப்புத் தொழிற்சாலை(distillery) வீதியில் வீசப்பட்ட போத்தல்களைத் திரும்பவும் பாவித்தது. சுடலைகளில் கவலை தீர்க்கக் குடிப்பவர்கள் வீசும் வெற்றுப் போத்தல்கள் பாவனைக்கு வந்தன.கூட்டுறவுச் சங்கமாக இருந்ததால் வரணி கள்ளுற்பத்தித் தொழிலைவாங்கச் சுகந்தனால் முடியவில்லை.

ஆனால்அப்பண்டத்தின் ஏக விநியோகிஸ்தன் என்றவகையில் அதன் தரத்தை ஏற்றுமதித்தரத்துக்கு உயர்த்த சுகந்தனால் முடிந்தது. பிரித்தானியா, கனடா, இத்தாலி போன்ற பல நாடுகளிலுள்ள வடிப்புத்தொழிற்சாலைகளுக்குச் சென்று அங்குள்ள தொழில்முறைகளைக் கற்றுக்கொண்டார்.

சுகந்தன் தென் கொரிய நிறுவனத்தின்மிக முக்கிய வாடிக்கையாளராக முடிந்தது. மூலப் பொருட்கள் உரிய நேரத்தில் தொழிற்சாலையைவந்தடைந்தன.

இவற்றைச் செய்ததன் மூலம் சுகந்தன் கள்ளுற்பத்திக்குரிய போத்தல், லேபல், பெட்டி அத்தனையையும் தன் ஒருங்கிணைந்த நிறுவனங்களுக்குள்ளேயே வைத்திருக்க முடிந்தது.

சுகந்தனின் வியாபார அபிவிருத்தியில் இன்னுமொரு அதிர்ஷ்டமும் வந்து ஒட்டிக்கொண்டது.

யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு மருத்துவர்களின் மாநாட்டுக்குபதநீர் வழங்குவதற்கான கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டது. பதநீர், பனையிலிருந்து எடுக்கப்படும் போதையூட்டாத ஒரு பானம். தாய்ப்பாலுக்குச் சமமான போஷாக்கு நிறைந்த ஒரு பானம்.

வரணிகூட்டுறவுச் சங்கத்தில் இது உற்பத்தி செய்யப்படுவதில்லையாயினும்சுகந்தன் பதனீர் தயாரிக்கும் இன்னுமொரு கூட்டுறவுச் சங்கத்தைக் கண்டுபிடித்தார்.

வடக்கிற்கான நோக்கு (vision) என்னவாயிருக்குமெனச் சுகந்தனிடம் கேட்டபோது கேட்டபோது, “ஒரு தலைமுறை அவகாசம் கொடுங்கள் யாழ்ப்பாணம் புளோரிடா போல வந்துவிடும். இளையவர்கள் ஆனந்தத்தை அனுபவிக்கும், வல்லுனர்கள் புதிய தொழில்களை ஆரம்பிக்கும், முதியவர்கள் நிம்மதியாக ஓய்வெடுக்கும் நிலமாக மாறும்” என்றார்.

error

Enjoy this blog? Please spread the word :)