Home Uncategorized யாழ் 20 வயது இளைஞனின் முகநூல் காதல்!!கீர்த்தி சுரேஷை எதிர்பார்த்து கிளிநொச்சி பரவை முனியம்மாவிடம்...

யாழ் 20 வயது இளைஞனின் முகநூல் காதல்!!கீர்த்தி சுரேஷை எதிர்பார்த்து கிளிநொச்சி பரவை முனியம்மாவிடம் மாட்டினான்!!

இத் தகவல் சமூகவலைத்தளங்களில் பரவிய தகவலாகும்.
பேஸ்புக் மூலம் பெண்ணொருவரை காதலித்த இளைஞன், அந்தப் பெண்ணை நேரில் கண்டதும் அதிர்ச்சியடைந்து, தாக்கிய சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. இறுதியில், பொலிஸ் நிலையம் வரை இந்த பிரச்சனை சென்று, தீர்க்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவர் பேஸ்புக்கில் அறிமுகமான ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்துள்ளார். அழகான இளம் பெண்ணின் படங்களை பதிவேற்றம், அது தான் என அந்தப் பெண் குறிப்பிட்டு வந்துள்ளார்.

இருவரும் பேஸ்புக், தொலைபேசியில் கதைத்து காதலை வளர்த்துக் கொண்டுள்ளார்

காதலின் வழக்கப்படி அடிக்கடி ரீலோட், சின்னச்சின்ன பரிசுகள் கொடுத்து வந்த இளைஞன், பின்னர் அவருக்கு மோதிரம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

காதலியை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்து வந்தபோதும், கிளிநொச்சி காதலி பல காரணங்களை கூறி அதை தவிர்த்து வந்தார்.

எனினும், விடாக்கண்டனான யாழ் இளைஞன், தொடர்ந்து வலியுறுத்தவே, காதலியும் சம்மதம் தெரிவித்தார்.

காதலியை காணும் ஆர்வத்துடன், நண்பர்கள் மூவரையும் அழைத்துக் கொண்டு கடந்த சில தினங்களின் முன்னர் கிளிநொச்சிக்கு சென்றனர்.

காதலியை நேரில் காணும் பரவசத்தில் சென்றவருக்கு, காதலியை நேரில் கண்டதும் பேரதிர்ச்சியடைந்தார். காரணம், முகப்புத்தகத்தில் பதிவேற்றியிருந்த புகைப்படத்திற்குரியவர், நேரில் வந்திருக்கவில்லை . அத்துடன், அவர் 35 வயதானவர்.

போலியான புகைப்படம் போட்டு தன்னை ஏமாற்றி விட்டதாக இளைஞன் ஆத்திரமடைந்து, அந்த பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளனர். நண்பர்களும் சேர்ந்து தாக்கியுள்ளனர். எனினும், தன்னுடையது தெய்வீக காதல் என அந்த யுவதி

கதறியுள்ளார். தான் பரிசளித்த மோதிரத்தை தருமாறு கேட்டும், பேஸ்புக் காதலன் தாக்கியுள்ளார்

அங்கு களேபரம் ஏற்பட்டதையடுத்து, பொலிசாருக்கு அறிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார், அனைவரையும் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றார்

இளைஞன் மோதிரத்தை கேட்க, இளைஞனுக்கு தான் சங்கிலி பரிசளித்ததாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். பின்னர், இரு தரப்பையும் சமரசம் செய்து, பொலிசார் அனுப்பி வைத்துள்ளனர் என சமூகவலைத்தளங்களில் தகவல் பரவியுள்ளது.