Home Uncategorized வவுனியாவில் கிணறு ஒன்றில் இளைஞனின் சடலம் மீட்பு!

வவுனியாவில் கிணறு ஒன்றில் இளைஞனின் சடலம் மீட்பு!

வவுனியா – ஓமந்தை, அலைகல்லுப்போட்டகுளம் கிராமத்திலுள்ள கிணறு ஒன்றில் இருந்து ஆண் ஒவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அலைகல்லுப்போட்டகுளம் கிராமத்தில் வசிக்கும் 26 வயதுடைய அர்ஜீனன் அருன்குமார் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து குறித்த இளைஞரைக் காணவில்லையென உறவினர் தேடிய நிலையில் நேற்று (27), குறித்த இளைஞனின் வீட்டிற்கு அருகாமையிலுள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.