புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் களவாக கனடா செல்ல முற்பட்ட 26 பேருக்கு நடந்த கதி!!

கிளிநொச்சியிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக கனடா செல்ல முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் 26 பேர் கைது செய்யப்பட்டனர் என்று சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

“26 பேரைக் கைது கைது செய்துள்ள சிறப்பு அதிரடிப்படையினர், அவர்களை இன்று பிற்பகல் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்துனர். எனினும் சந்தேகநபர்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படாத்தால் விவரங்களைக் கூற முடியாது” என்று பொலிஸார்
தெரிவித்தனர்.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்டவர்களை கடலில் அல்லது விமான நிலையம் ஊடாக பயணிக்கும் போதே நிரூபிக்க முடியும் என்ற நிலையில் கிளிநொச்சி கனகபுரத்தில் வைத்து 26 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் பணத்தைப் பெற்றுவிட்டு கடத்தல்காரர்களே சிறப்பு அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.