புதினங்களின் சங்கமம்

மனைவியை கீழே விழுத்தி தலையால் இரத்தம் வழிந்தது! கேள்வி கேட்ட கணவனைத் துரத்தினார்கள்! யாழ் போதனா வைத்தியசாலையில் நடந்த கொடூரம்!

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்
உரும்பிராயைச் சேர்ந்த நல்ல தம்பி என்ற ஒருவர் தனது மனைவியைச் சுகயீனம் காரணமாக யாழ் வைத்தியசாலையில் அனுமதித்திருந்தார்,
பெண்கள் விடுதி என்பதால் மனைவியோடு கூடவே நிற்க்க முடியாத சூழ்நிலை.
ஆள் உதவி இல்லாத காரணத்தால் மனைவியை அனுமதித்திருக்கும் விடுதிக்கு வெளியில் உள்ள விறாந்தாவில் குந்தி இருப்பதும் அப்பப்போ மனைவியைப் பார்த்து வருவதுமான இருந்திருக்கிறார்.
அங்கு நோயாளிகளோடு கூட நிற்க்கும் சக பெண்களிடம் மனைவியைக் காட்டி ஏதும் தேவை என்றால் உதவி செய்யுங்கள், அல்லது நான் அந்த வெளி விறாந்தாவில்தான் இருப்பேன் என்னை கூப்பிடுங்கள் என்று கூறியும் உள்ளார்.
திடிரென அந்த விடுதியில் இருந்து ஒரு பெண் ஓடி வந்து உங்கட மனிசியைக் கீழ போட்டுட்டாங்க மண்டை உடைஞ்சு ரெத்தம் வருகுது என்று பதைபதைப்பாய்க் கூற கணவரும் பறந்தடிச்சு விடுதிக்குள்ளே ஓடிப் போயிருக்கிறார்.
ஒரு கட்டிலில் இருந்து இன்னொரு கட்டிலுக்கு ஆளை மாற்ருவதற்காக நோயாளியைத் துணியோடு தூக்கும்போது தலைப்பக்கமாகப் பிடித்திருந்தவர் துணியின் பிடியை விட்டு விட்டார்.
மண்டை நேரடியாக நிலத்திலே விழுந்ததால் மண்டை உடைந்து இரந்தம் வந்து விட்டது.
ஆயிரம் சரி பிழை இருந்தாலும் கணவனுக்கு கோபம் வரும்தான்.
அந்தக் கோபத்தில் கணவன் சத்தம் போட்டுள்ளார்.
இதுவே நான் இல்லாத நேரத்தில் நடந்திருந்தால் மனைவி தானாகவே கட்டிலில் இருந்து தவறி விழுந்து விட்டார் என்று கூறியிருப்பீர்கள்.
ஒரு வேளை செத்திருந்தால் ஏதாவது காரணத்தைச் சொல்லி கதையை முடித்து உங்கட உங்கட வேலையைப் பார்த்திருப்பீர்கள்.
நாங்கதான் தலையில இடி விழுந்தமாதிரிக் கிடக்கனும் என்று தாறுமாறாகக் கத்தியுள்ளார்,
ஆனால் வைத்தியசாலை ஊழியர்களோ சர்வ சாதாரணமாக இப்ப என்ன செத்தா போய்ட்டா?
அஸ்பதிரிக்குள்ள இருக்கும்போதுதானே மண்டை உடைஞ்சிருக்கு, அதுக்கு நாங்க உடனே தையல் போடுவம்.
இவரை யார் உள்ள விட்டது
இவைரை வெளியால அனுப்புங்க என்று வெளியால விரட்டியுள்ளார்கள்,
கணவரும் செய்வதறியாது வெளி விறாந்தாவில் வந்த நின்றுள்ளார்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த காவலாளிகள் வெளி விறாந்தாவில் நின்வரையும் அங்கு நிற்க்க விடாது வாயில்வரை கூட்டி வந்து வெளியே விரட்டி விட்டார்கள்.