புதினங்களின் சங்கமம்

தனது மனைவியுடன் பொலிஸ் புலனாய்வாளன் கட்டிலில் உறவு கொண்டிருந்த போது கத்தியால் குத்திய சிங்கள கணவன்!!

தனது மனைவியின் கள்ளக்காதலனான பொலிஸ் புலனாய்வு பிரிவு கான்ஸ்டபிள், கள்ளக்காதலியுடன் உடல் உறவில் ஈடுபட்டிருந்த போது, கணவனால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு, படுக்கையில் வைத்தே கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

கத்திக்குத்து காயங்களுடன் வீட்டிலிருந்து தப்பிச் சென்ற புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர், காயங்களுக்கு இரகசியமாக சிகிச்சை பெற்று வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் நேற்று (7) தெரியவந்துள்ளது.

அவர் சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் ஜூலை 31ம் திகதி அல்லது அதை ஒட்டி நடந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த கான்ஸ்டபிள் காலி பொலிஸின் புலனாய்வுப் பிரிவிற்குட்பட்டவர்.

இந்த கான்ஸ்டபிள் இந்த பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், கணவர் இல்லாத நேரத்தில் அவருடன் தங்கியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.