கனடாவில் இலங்கைப் பெண் உட்பட 10 பேரை வாகனத்தால் மோதிக் கொன்றவன் விசரனா?? (Photos)
இலங்கைப் பெண் உட்பட 10 பேரை வேன் மோதிக்கொன்று, 16 பேர் வாழ்வில் மறக்க முடியாத அளவுக்கு படுகாயம் ஏற்படுத்திய நபர் தொடர்பில், பிரபல தடயவியல் மனோ நல மருத்துவர் முக்கிய தகவல் ஒன்றை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
2018ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி, ரொரன்றோவில் பாதசாரிகள் கூட்டத்துக்குள் வேன் ஒன்றை செலுத்தி, நிற்காமல் வேகமாக சென்ற Alek Minassian (28) என்ற நபர் கைது செய்யப்பட்டார்.
இந்த கோர சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டார்கள், பலர் படுகாயமடைந்தார்கள், மூளை பாதிக்கப்பட்டவர்களும் கால்களை இழந்தவர்களும் அதில் அடக்கம். அவர் மீது 10 கொலைக்குற்றச்சாட்டுகள் மற்றும் 16 கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
விசாரணையில், Minassian, Incel என்ற ஒன்லைன் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், காதலிக்கவும், பாலுறவு கொள்ளவும் பெண் கிடைக்காததால், பெண்கள் மீதும் பாலுறவு கொள்பவர்கள் மீதும் வெறுப்புற்று, அவர்களை கொலை செய்யும் எண்ணம் கொண்டவர்கள் ஆவர்.
இதற்கிடையில், இந்த குற்றச்செயலுக்கு தான் பொறுப்பல்ல, தனது மன நல பிரச்சினைதான் நடந்த சம்பவத்திற்கு காரணம் என Minassianஇன் சட்டத்தரணி வாதம் ஒன்றை முன்வைத்திருந்தார். ஆனால், பல்வேறு முக்கிய வழக்குகளில் குற்றவாளிகளை ஆய்வு செய்தவரான Dr. John Bradford என்னும் மனநல மருத்துவர், Minassianஐ பரிசோதித்தார்.
தனது பரிசோதனைகளின்முடிவில், Minassianக்கு மன நல பிரச்சினை எதுவும் இல்லை என்றும், அவனது குற்றச்செயல்களுக்கு அவன்தான் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார். Minassian இடமோ, அவனது குடும்பத்தாரிடமோ எந்த வித மனநல பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்த Dr. John Bradford, குற்றம் நடப்பதற்கு முன்பும், குற்றம் நடந்த பின்னரும், அவனிடம் எந்த மன நல பிரச்சினையும் இருந்ததாக தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதனால், கொலைகளை செய்துவிட்டு, பலரை ஊனமாக்கிவிட்டு மருத்துவமனையில் போய் உட்கார்ந்துகொள்ளலாம் என எண்ணியிருந்த Minassianஇன் திட்டத்தில் மண் விழுந்துள்ளது.