புதினங்களின் சங்கமம்

யாழில் வடிவேலு பாணியில் பொலிசாரிடம் அகப்பட்ட வாள் வெட்டு காவாலிகள்!!

வாள்களுடன் வீதியில் நின்று அட்டகாசம் புாிந்த கும்பல் பொலிஸாா் பயணித்த காா் ஒன்றினை மறித்து அட்டகாசம் புாிய முயற்சித்த நிலையில் உள்ளே பொலிஸாா் இருப்பதைக் கண்டு தலைதெறிக்க ஓடியுள்ளனா்.இந்த சம்பவம் சாவகச்சோி- பெருங்குளம் சங்கத்தானை பகுதியில் இடம்பெற்றுள்ளது. வீதியில் வாள்களுடன் நின்று வீதியால் பயணிப்பவா்களை அச்சுறுத்தியதுடன், வாகனங்களை மறித்து அட்டகாசம் புாிந்துள்ளனா். இதனையடுத்து பொலிஸாா் காா் ஒன்றில் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனா். இதனை அறியாத வாள்வெட்டு குழு காருக்குள் பொலிஸாா் இருக்கிறாா்கள் என்பது தொியாமல் காரை மறித்து அட்டகாசம் புாிய முயன்றனா்.

இந்நிலையில் சடுதியாக காருக்குள் இருந்து பொலிஸாா் இறங்குவதை அவதானித்ததும், வாள்களை துாக்கி வீசிவிட்டு தப்பியோடியுள்ளனா். எனினும், துரத்தி சென்ற பொலிஸாா் இருவரை கைது செய்தனா்.