புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சி முரசுமோட்டையில் கொடூர விபத்து!! 11 பேர் படுகாயம்!! (Photos)

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டைப் பகுதியில் டிப்பர் வாகனமும் தனியார் பேருந்தும் விபத்துக்குள்ளானதில் பதினொரு பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

பரந்தன் பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் வாகனமும் தனியார் பேருந்தும் முரசுமோட்டைப் பகுதியை கடக்கும் போது தனியார் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது பின்தொடர்ந்து வந்த டிப்பர் வாகனம் தனியார் பேருந்தின் பின் பகுதியில் மோதுண்டே குறித்த விபத்து ஏற்ப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் டிப்பர் வாகனத்தின் உதவியாளர் மற்றும் பேருந்தில் பயணித்த பத்து பயணிகள் உட்பட பதினொரு பேர் காயங்களுக்குள்ளான நிலையில் வட்டக்கச்சி வைத்தியசாலையில் இருவரும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒன்பது பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Image may contain: one or more people, shoes and outdoorNo photo description available.Image may contain: one or more people, people standing, sky, outdoor and natureImage may contain: outdoorImage may contain: one or more people, sky and outdoorImage may contain: sky and outdoorNo photo description available.Image may contain: sky and outdoorImage may contain: one or more people and outdoor