வவுனியாவில் மிக இரகசியமாக பர்டசாலை அதிபருக்கு கொரோனா ஊசி செருகியது யார்?? நடந்தது என்ன?

மிக இரகசியமாக பிரபல பாடசாலை அதிபருக்கு தடுப்பூசி..! செல்வாக்கு இருந்தால்
தடுப்பூசி எவரும், எங்கும் பெறலாமா? வடக்கு சுகாதாரத்துறை உறக்கம்..

வவுனியா மாவட்டத்தில் அதிபர், ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இதுவரை
ஆரம்பிக்கப்படாத நிலையில் நேற்றய தினம் பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் இரகசியமாக
தடுப்பூசியை பெற்றிருக்கின்றது.

இது எப்படி சாத்தியம் என கேள்வி எழுப்பியிருக்கும் பொதுமக்கள், பிராந்திய சுகாதார
சேவைகள் பணிமனை மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சு தடுப்பூசி வழங்கலில் முறைகேடாக
நடக்கிறதா? என கேள்வி எழுப்புகின்றனர்.

மாவட்டத்தில் அண்மையில் இராணுவத்தினால் ஆயிரம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டு அறுபது
வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் பலருக்கு
செலுத்துவதற்கான நடவடிக்கைகள்

இடம்பெற்றுவரும் நிலையில் நேற்று முன்தினம் தபால் நிலைய ஊழியர்களுக்கு தடுப்பூசி
செலுத்தப்பட்டிருந்தது. எனினும் பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும்
நடவடிக்கை எவையும் வ

மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று வவுனியா பிராந்திய சுகாதார
சேவைகள் பணிமனையில் ஓமந்தையில் உள்ள பிரபல்யமான பாடசாலையின் அதிபர் ஒருவருக்கு
தடுப்பூசி ஏற்றப்பட்டமை

பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நடவடிக்கை வவுனியா பிராந்திய சுகாதார
சேவைகள் பணிமனையில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்று வருகின்றமை அம்பலத்திற்கு வந்துள்ளது.

எவ்வாறு பாடசாலையின் அதிபர் ஒருவருக்கு தன்னிச்சையாக செலுத்தப்பட்டுள்ளது என்ற
கேள்வியையும் அதிகாரியின் சிபார்சு இல்லாமல் போட்டிருக்க முடியுமா? என்ற பலத்த
சந்தேகத்தையும் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளதாகவும்

இதனுடன் தொடர்புபட்டுள்ள அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை மாகாண
சுகாதார அமைச்சு எடுக்குமாறும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.வவுனியாவில் மிக இரகசியமாக பர்டசாலை அதிபருக்கு கொரோனா ஊசி செருகியது யார்?? நடந்தது என்ன?

error

Enjoy this blog? Please spread the word :)