கள்ளமாக இன்னொருவனுடன் யாழ் சென்ற மனைவி!! கொலை வெறியில் கணவன்!!
திருகோணமலை பகுதியில் மனைவியை தாக்கி காயப்படுத்திய கணவரை இன்று(3) காலை கைது செய்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மனைவி கணவனின் கதையை கேட்காமல் கணவனுக்கு தெரியாமல் வேறு ஒரு நபருடன் யாழ்ப்பாணம் பகுதிக்கு சென்றதாக தெரிவித்து மனைவியை தாக்கி காயப்படுத்தியுள்ளதாகவும், பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காயங்களுக்குள்ளான மனைவி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு, பொலிஸாருக்கு அவசர தொலைபேசியூடாக கிடைத்த முறைப்பாட்டுக்கமைய கணவனை கைது செய்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சந்தேக நபரை தடுத்துவைத்துள்ளதோடு, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.