புதினங்களின் சங்கமம்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து நாளை புதன்கிழமை(03) காலை-09 மணி முதல் யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

இதுவரை வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும்,2019 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கென நிதி ஒதுக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துமே இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் தெரிவித்துள்ளது.

எனவே, இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகளைத் தவறாது கலந்து கொள்ளுமாறு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் கேட்டுள்ளது.