ஜோதிடம்

இன்றைய இராசி பலன் (03.04.2019)

மேஷம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர் பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். மதிப்புக் கூடும் நாள்.

ரிஷபம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் மூத்த அதிகாரியின் நம்பிக்கையை பெறுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மிதுனம்: கணவன்-மனை விக்குள் விட்டு கொடுத்து போவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படு வீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புதிய பாதை தெரியும் நாள்.

கடகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப் படுவீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். மற்றவர்களைப் பற்றிய வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புது முயற்சிகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் அதிகாரி களால் அலைகழிக்கப்படுவீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

சிம்மம்: பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். தாய் வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டா ரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபா ரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவி செய்வீர்கள். நல்லது நடக்கும் நாள்.

கன்னி: குடும்பத்தில் உள் ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். அரசால் அனு கூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். தொட்டது துலங்கும் நாள்.

துலாம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவு களை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.

விருச்சிகம்: நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். பயணங்கள் திருப்தி கரமாக அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர் களின் நட்பு கிடைக்கும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். வெற்றி பெறும் நாள்.

மகரம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக் கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக்கொள் வார்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கி கள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். நிம்மதியான நாள்.

கும்பம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தாரை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளரீர்கள். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

மீனம்: உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.