புதினங்களின் சங்கமம்

யாழில் வீதிக் கச்சேரி நடாத்தியவர்களை துரத்திப் பிடித்து அள்ளிச் சென்ற பொலிஸ்!!

யாழ் கச்சேரிச் சுற்றுவட்டாரத்தில் கச்சேரி மற்றும் பிரதேசசெயலகங்களுக்கு செல்லும் மக்களுக்கு, படிவங்கள் நிரப்ப உதவி புரிவது என்ற போர்வையில், பணச் சுருட்டலில் ஈடுபட்டு வந்தவர்கள் பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டனர். இன்று காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதிகளில் தெரு ஓரங்களில் கதிரைகள் போட்டு பேனை மற்றும் படிவங்களுடன் நிற்கும் இவர்கள் கச்சேரி மற்றும் பிரதேசசெயலகங்களுக்கு தேவை நிமிர்த்தம் செல்லும் பொது மக்களை படிவங்கள் நிரப்பித் தரப்படும் என கூறி வழி மறித்து தொல்லைப்படுத்தி வந்துள்ளனர். இதனையடுத்து உயரதிகாரிகளின் வழிநடாத்தலில் கிராமசேவையாளர்களால் பொலிசாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டு இவர்கள் இன்று காலை பொலிசாரால் சுற்றி வளைத்துப் பிடிக்கப்பட்டு பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரியவருகின்றது.

Image may contain: one or more people, tree, sky, motorcycle and outdoorImage may contain: one or more people, people sitting, tree, motorcycle and outdoorImage may contain: one or more people, people sitting, tree, motorcycle and outdoor