கைது செய்யப்பட்டு ரஞ்சன் ராமநாயக்க நாளை நீதிமன்றத்திற்கு!!
கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாதிவெலயில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைத்து அவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு பிடியாணை ஒன்றை பெற்றுக் கொள்ளமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதனையடுத்து ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்தது.
அதனடிப்படையில் அவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
அவரை நாளை நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

