பூநகரி சங்குப்பிட்டிப் பாலத்தில் திட்டமிட்ட கொலையா?? யாழ் வீரர் பலி!! (Photos)
சங்குப்பிட்டி பாலத்தில் விபத்து, சைக்கிள் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவா் உயிாிழப்பு..
யாழ்ப்பாணம்-மன்னாா் வீதியில் சங்குப்பிட்டி பாலத்திற்கருகில் சைக்கிள் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒருவா் மீது வாகனம்மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் சைக்கிள் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளாா். இந்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இது தொடா்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் சம்பவத்தில் உயிாிழந்தவா் கொக்குவில் பகுதியை சோ்ந்த பொன்னையா பாலரஜித் (வயது37) என்பவா் என அடையாளம் காணப்பட்டாா்.
இதே வேளை இந்த விபத்து திட்டமிட்டு நடைபெற்றது என பொதுமக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.