வெளிநாட்டிலிருந்து வந்த மனைவி தன்னுடன் உறவுகொள்ள பிடிக்கவில்லை என கூறியதால் இடுப்பில் டைனமட் கட்டி வெடிக்க வைத்து கணவன்பலி!!
கிண்ணியா போலீஸ் பிரிவுக்குட்பட்ட,ஏழு புளியடி மீள்குடியேற்ற கிராமப் பகுதியில் இன்று(10) காலை ஆறு முப்பது மணி அளவில் டைனமைட் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.பெரிய கிண்ணியா கட்டையாறு பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய ஜுனைதீன் ரபாய்தீன் என்பவரை இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.ஏழுபுளிடியாளியில் வசித்து வந்த இவர் தனது மனைவி வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக குவைத்துக்கு சென்று ஒன்றரை வருடங்களின் பின் மீண்டும் வீடு திரும்பி உள்ளார்.வெளிநாட்டில் இருந்து வந்து ஐந்து நாட்களே ஆன நிலையில்
இருவருக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள், சில வாய் தர்க்கங்கள் ஏற்பட்டு வெளிநாட்டில் இருந்து வந்த மனைவி தனது கணவனுடன் அன்புடன் வாழ விருப்பமில்லை என்ன கூறியுள்ளார்.இதன் காரணமாக மனக் கவலையடைந்த கணவன் வெடித்து செத்துப் போவேன் என பலரிடம் கூறியுள்ளார். கூறியபடியே இன்று காலை ஆறு முப்பது மணிக்கு வெடிக்கும் டைனமட் பொருளை தனது இடுப்பில் கட்டிக் கொண்டு வெடித்து உயிர் இழந்து உள்ளார். இறந்தவரின் உடல் ஏழு புளியடி மேல் குடியேற்ற கிராமத்தில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை கிண்ணியா போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.

