புதினங்களின் சங்கமம்

மட்டுவில் கணவனைக் காணவில்லை என 4 மாதங்களின் பின் முறையிட்ட மல்லிகா!!

களுவாஞ்சிக்குடி குறுமண்வெளி -12, அரசடி வீதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மல்லிகா என்பவர், தனது கணவரான தருமலிங்கம் கோபாலகிருஷ்ணனை கடந்த நான்கு மாதங்களாக காணவில்லையென்றும், தொலைபேசி அழைப்புக்கூட கணவரிடமிருந்து வரவில்லையென்றும்,

கொழும்புக்கு வேலைக்கு செல்வதாக கூறிச் செல்லும் போது என்னோடு சிறிது  மனக்கசப்போடுதான் சென்றார் என்றும் மனைவி மல்லிகா தெரிவித்தார்.

 

பல்வேறு வகையிலும் என்னால் தேடுதல் முயற்சி செய்தபோதும் கண்டுபிடிக்க முடியாததால், தயவு செய்து எங்களது 11 வயது பெண் மகளின் எதிர்காலம் கருதி கணவரை கண்டுபிடித்துத்தர உதவுங்கள் என மன்றாட்டமாக கேட்கிறார்.

 

இவர் மனைவியுடன் முரண்பட்டு கொழும்புக்கு வேலைக்காக சென்றுள்ளதால்,

எங்காவது தொழிலகங்களில்தான் இருப்பார்.

 

தயவுசெய்து இச் செய்தி அவரை சென்றடையும் வரை பகிருங்கள்.

 

களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் போடப்பட்ட முறைப்பாட்டு இலக்கம் : CIB 43/ 153 (17/03/2019)

 

தொலைபேசி : 076 4796490