அம்மாளாச்சியின் அந்த இடத்தை ஐந்துபேரும் ஒரே நேரத்தில் திறந்தார்கள் (Photos)
உண்மையில் நீங்கள் பார்க்கும் இந்த புகைப்படத்தில் உள்ளமை தொடர்பாக அறிந்தால் இது நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனுக்கே ஒதுக்கப்பட்டது . உண்மையில் அவர் ஏனைய நான்கு பேருக்கும் விட்டுக் கொடுத்ததாலேயே அவர்கள் 4 பேரும் தொட்டுக் கொள்ள வாய்ப்பாக அமைந்தது. தனது கட்சிக்காக அவர் எந்தவிட்டுக் கொடுப்பையும் செய்வார் என்பது இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
கம்பரெலிய கிராம திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற ஈ.சரவணபவனின் இரண்டு மில்லியன் ரூபா சிபாரிசில் நாச்சிமார் கோவில தேர் ஓடும் வீதி தார் வீதியாக மாற்றப்பட்டு இருக்கிறது இது நேற்று இரவு கயிறு கட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு சரவணபவனின் பங்களிப்பு வெறும் சிபாரிசு செய்தல் மட்டுமே .இலங்கை பூராகவும் இந்த ஒதுக்கீடுகள் இருக்கிறது .தெற்கில் சிபாரிசுகளை UNP செய்கிறது .வடக்கு கிழக்கில் கூட்டமைப்பு செய்கிறது . இந்த சிபாரிசு செய்த உரிமையில் (?) சரவணபவன் தொடக்கம் தர்சனந்த் வரை கயிறை பிடித்து கொண்டு இருக்கிறார்கள்
கோவில் கேணி திறக்கிறது தொடங்கி இப்போது தேர் ஓடும் வீதிக்கு நாட வெட்டுற அளவிற்கு தரம் தாழ்ந்து இருக்கிறார்கள் ..
மறுபுறம் வடக்கு கிழக்கு பொது போக்குவரத்து மிக மோசமாக இருக்கிறது. .இதுபற்றி யாருக்கும் அக்கறை இல்ல.ஒரு ஒரே உதாரணம், முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் , சுமார் 124 பாடசாலைகள் செயற்பட்டு வருகின்ற நிலையில், அதில் 70க்கும் மேற்பட்ட பாடசாலைக்குச் செல்வதற்கென போக்குவரத்து வசதிகள் இல்லை. வவுனியா , கிளிநொச்சியிலும் இதே நிலை இருக்கிறது .
இங்கே நமது பிரதிநிதிகள் தேர் ஓடுற வீதிக்கு கயிறு வெட்டி விளையாடி கொண்டு இருக்கிறார்கள்.