மதுபானம் தயாரிப்பதற்காக எத்தனோல் இறக்குமதி செய்ய தடை

நாட்டினுள் வெளிநாடுகளில் இருந்து எத்தனோல் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் அடிப்படையில் இன்று (01) முதல் மதுபானம் தயாரிப்பதற்காக எத்தனோல் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய ரீதியில் எத்தனோல் பாரிய அளவில் உற்பத்தி செய்யப்படுவதினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

error

Enjoy this blog? Please spread the word :)