கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்து! இந்த இடத்திலேயே இரு இளைஞர்கள் பலி!! (Photos)
கிளிநொச்சி கனகபுரம் வீதியில் இன்று அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
தம்புள்ளையிலிருந்து மரக்கறிகளை ஏற்றி வந்த லொறி கிளிநொச்சி கனகபுரம் பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறியை விநியோகித்து விட்டு திரும்பி வருகின்ற வேளை எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் குறித்த லொறியுடன் மோதியதில் இரு இளைஞர்களும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.
கிளிநொச்சி உதயநகர் மேற்கைச் சேர்ந்த 23 வயதுடைய வரதராஜா ஜெமினன் மற்றும் யாழ்ப்பாணம் செட்டியார் மடம் அராலி மேற்கைச் சேர்ந்த 29 வயதுடைய செல்வநாயகம் அஜிந்தன் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

