யாழ் கோண்டாவில் பகுதியில் அமெரிக்க வெள்ளைக்காரனிடம் கொள்ளையார்கள் கைவரிசை!!
யாழ்ப்,கோண்டாவில் பகுதியில் அமெரிக்க பிரஜை ஒருவரிடம் இருந்து 300 அமெரிக்க டொலர் பணத்தினை இரு இளைஞர்கள் பறித்துச்சென்ற இளைஞர் குழு!
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் வைத்து அமெரிக்க பிரஜை ஒருவரிடம் இருந்து 300 அமெரிக்க டொலர் பணத்தினை இரு இளைஞர்கள் பறித்துச் சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அமெரிக்க பிரஜை ஒருவர் யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதிக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இதன்போது அவரை பின் தொடர்ந்து வந்த இரு இளைஞர்கள் அவரிடம் இருந்த பணத்தினை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.
இதன்போது பாதிக்கப்பட்ட அமெரிக்க பிரஜை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

