புதினங்களின் சங்கமம்

கசிப்பு உற்பத்தி நிலையங்களை துவம்சம் செய்த கிளிநொச்சி இளைஞர்கள்

கிளிநொச்சி கோணாவில் கிராமத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற கசிப்பு உற்பத்தியை கட்டுப்படுத்துமாறு பொலிசாருக்கு பொதுமக்கள் அறிவித்திருந்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில், கிராமத்தைச் சேர்ந்த சுயாதீன இளைஞர்கள் குழு ஒன்று தாமாகவே முன் வந்து கசிப்பு உற்பத்தி நிலையங்களை முற்றுகையிட்டு அழித்துள்ளனர்.

15 க்கு மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து கோணாவில், யூனியன்குளம் பிரதேசங்களின் காட்டுப்பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த கசிப்பு உற்பத்தி நிலையங்களே முற்றுகையிடப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

இதன்போது 15 க்கு மேற்பட்ட பரல்கள், 25 க்கு மேற்பட்ட பிளாஸ்ரிக் கான்கள் என்பவற்றை வெட்டி சேதப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் தொடர்ச்சியாக அவ் இளைஞர்கள் காடுகளுக்குள்ளும் சென்று கசிப்பு உற்பத்தி நிலையங்களை தேடி அழித்து வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த இளைஞர்களின் செயற்பாடுகள் கிராம மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.