புதினங்களின் சங்கமம்

மன்னார் கடலால் தப்பிக்க முயன்ற நைஜீரிய கும்பல்! எதற்காக??(Photos)

கடல்மார்க்கமாக நாட்டைவிட்டு தப்பிச்செல்ல முயன்ற ஆறுபேர் மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நால்வர் நைஜீரிய பிரஜைகள்.

நேற்று (31) இவர்கள் கைதாகினர்.

மன்னாரிலிருந்து 12 கடல்மைல்கள் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை கடற்படையினர் சோதனையிட்டபோதே, இந்த குழுவினர் மாட்டிக் கொண்டனர்.

இதற்கிடையே, கைது செய்யப்பட்ட 12 கடல் மைல்கள் தொலைதூர கடற்பகுதியில் கடலோரப் பகுதியில் கடற்படையினர் கைது செய்யப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டனர்.

26, 27, 32, 42 வயதுடைய நைஜீரிய பிரஜைகளும், 20, 23 வயதான மன்னாரை சேர்ந்த இரண்டு இளைஞர்களுமே கைதாகியுள்ளனர். இவர்கள் பேசாலை கடற்பரப்பிலிருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக தலைமன்னார் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.