இந்தியச் செய்திகள்புதினங்களின் சங்கமம்

‘பெரிய விஞ்ஞானியா நீ’ – பொலிசாருடன் வாக்குவாதப்பட்ட காவாலிக்க தக்க பாடம் புகட்டிய போலீஸ்!!! (Video)

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 வரை அமலில் இருக்கும் இந்த ஊரடங்கின் போது சமூக பாதுகாப்பை கருத்தில்கொண்டு பொதுமக்கள் வெளிவரக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக சாலையில் தேவையில்லாமல் சுற்றித்திரியும் மக்களிடம், வெளியில் வராதீர்கள் என அன்பாக போலீசார் வணங்கி கேட்கும் வீடியோ வைரல் ஆனது. இது ஒரு புறம் இருக்க தடையை மீறி வெளியில் வந்த இளைஞர் ஒருவருக்கு போலீசார் லத்தியால் பாடம் எடுக்கும் வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 144 தடை உத்தரவை மீறி அநாவசியமாக சாலையில் சுற்றி திரிந்த இளைஞரை போலீசார் கண்டித்துள்ளனர். முதலில் அந்த இளைஞர், தான் இந்திய குடிமகன் என்றும் 144 குறித்து முதல்வர் நேரில் வந்து விளக்கம் தர வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், கொரோனா பரவல் குறித்து தங்கள் பாணியில் அவருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அனுப்பி வைத்தனர்.

<blockquote
class="twitter-tweet"><p lang="en" dir="ltr">This youngster
from a village in TN picked up an argument with the police for
preventing free movement to curb COVID-19. He even wanted the Chief
Minister to come &amp; explain to him the logic behind such a move.
Police took him to the station and taught him a lesson on Coronavirus.
<a
href="https://t.co/j6QYGD79n3">pic.twitter.com/j6QYGD79n3</a></p>&mdash;
Mohamed Imranullah S (@imranhindu) <a
href="https://twitter.com/imranhindu/status/1243416544597528576?ref_src=twsrc%5Etfw">March
27, 2020</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js"
charset="utf-8"></script>

தீயாய் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டுகோள் விடுத்தும் இது போன்ற இளைஞர்கள் வெளியில் சுற்றி தங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருவதாக போலிசார் வருத்தம் தெரிவிக்கின்றனர். இது குறித்து அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.