கொழும்பிலிருந்த வந்த யாழ் தேவி ரயில் மோதி பளையில் ஆட்டோ நசுங்கியது!! சாரதி பலி!! வீடியோ
கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த யாழ்தேவி புகையிரதத்துடன் கிளிநொச்சி பளை இத்தாவில் பகுதியில் வைத்து முச்சக்கரவண்டி ஒன்று மோதுண்டதில் முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற நபர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று மாலை 4:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.





