54 பயணிகளுடன் கொழும்பு சென்ற பஸ் வெள்ளத்தில் அள்ளுண்டு செல்லும் பரபரப்புக் காட்சிகள்
பொலன்னறுவை – கல்லெல்ல பிரதேசத்தில் வௌ்ள நீரில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட தனியார் பஸ் ஒன்றினை பாதுகாப்பு படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காப்பாற்றியுள்ளனர்.
இன்று அதிகாலை மாதுறுஓயவில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுக் கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று பொலன்னறுவை கல்லெல்ல பிரதேசத்தில் வௌ்ள நீரில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தர்ப்பத்தில் பஸ்ஸினுள் குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், பெண்கள் உட்பட 54 பேர் பயணித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது, பொலிஸார், இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட நிவாரண குழுவினர் இணைந்து பஸ்ஸினை காப்பாற்றியுள்ள நிலையில் பஸ்ஸில் பயணித்த எந்தவொரு பயணிக்கும் எவ்வித அனர்த்தமும் ஏற்படவில்லை என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு குறிப்பிட்டுள்ளது.

