யாழ் சிறைச்சாலைக்கு முன் அமர்ந்த புத்தர் சற்று முன் அகற்றப்பட்டார் (Photos)
யாழ்ப்பாணம் புதிய சிறைச்சாலை முன்பாக பௌத்த சின்னங்கள் வைப்பதற்கு மிக இரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இரவோடிரவாக புத்தர் விஐயனின் சிலைகளும் இன்று கொண்டு வரப்பட்டுள்ளன.
விஐயனின் சிலையும் புத்தர் சிலைகளை வைத்து இன்று காலை திறப்பு விழா செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிய வந்துள்ளது. அதாவது காலை சிறைச்சாலைகள் ஆணையாளர் யாழ்ப்பாணம் வரவுள்ள நிலையில் அவரைக் கொண்டு இதனைத் திறந்து வைப்பதற்கு இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்த நிலையில் இன்று காலை பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து குறித்த புத்தர்சிலை சிறைக்கைதிகளின் துணையுடன் அங்கிருந்து அகற்றப்பட்டதாகத் தெரியவருகின்றது.





