புதினங்களின் சங்கமம்

சுண்டிக்குளத்தில் மக்களின் காணிகளைச் சுரண்டும் பணி தொடர்கிறது!

யாழ் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் J/435 கிராம சேவகர் பிரிவில் மக்களின் காணிகள் இரகசியமான முறையில் கடற்படையால் இரண்டாவது நாளாக இன்றும்(7)அளவீடு தொடர்ந்தது.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிக் குளம் பகுதியான J/ 435கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள மக்களின் நிலங்கள், மக்களுக்குரிய காணிகள் திருகோணமலையில் இருந்து வந்த கடற்படையின் ஒரு குழுவால் மிக இரகசியமாக நேற்று (6)அளவீடு செய்யப்பட்டது.

தங்களின் சொந்தக்காணிகள் கடற்படையினரால் அளவீடு செய்யப்படுவதை அறிந்த அங்கிருந்த ஒரு சில மக்கள் கடற்படையிடம் கேள்வி எழுப்பிய போது உங்களின் காணி என்றால் அனுமதிப் பத்திரத்தை காட்டுமாறு தெரிவித்ததாக மக்கள் கூறுகின்றனர்

அந்த பகுதியில் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன வீடுகள்,கிணறுகள் மற்றும் மக்களால் பராமரிக்கப்பட்ட மரங்களும் உள்ளன

இது தொடர்பாக அப்பகுதி கிராம அலுவலருக்கோ ,வடமாட்சி கிழக்கு பிரதேச செயலருக்கோ தெரியப்படுத்தப்படவில்னயென கூறப்படுகிறது.

May be an image of 3 people and beachMay be an image of 2 people, people golfing, people skeet shooting, dartboard, frisbee and text