மலசலம் கழிப்பதில் பிரச்சனை!! யாழ் மாநகரசபை ஊழியர் மீது பழ வியாபாரி தாக்குதல் (Video)
யாழ்ப்பாணம் மாநகர நவீன சந்தை கட்டடத் தொகுதி மலசல கூட கட்டணம் அறவீடு செய்பவரை நகர பழக்கடை வியாபாரிகள் இருவர் தாக்கியதாகதால், அவர்களைக் கைது செய்யக் கோரி மாநகர ஊழியர்கள் பணிப்புறக் கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாநகர நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் உள்ள மலசல கூடங்களைப் பயன்படுத்துவோரிடம் கட்டணம் அறவிடப்படுகிறது.
மலசல கூடத்தை பயன்படுத்திய நகர பழக்கடை வியாபாரி நேற்றைய தினம் தான் இரண்டாவது தடவை பயன்படுத்துவதால் கட்டணம் செலுத்த முடியாது என்று மாநகர ஊழியருடன் தர்க்கத்தில் ஈடுப்பட்டதுடன், அவரைத் தாக்கியும் உள்ளார்.
அதனையடுத்து சக ஊழியர் ஒருவர் நியாயம் கேட்கச் சென்ற போது மற்றொரு வியாபாரி அவரைத் தாக்கியுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்ற நிலையில் யாழ்ப்பாணம் மாநகர சுகாதாரத் தொழிலாளிகள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து இந்தப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தம் மீதான தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற போதும் அதற்கு உரிய நடவடிக்கைகள் யாராலும் எடுக்கப்படவில்லை என சுகாதாரத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
சம்பவத்தை அறிந்த கடற்றொழில் மூலவளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நகருக்கு வந்து ஆராய்ந்த பின்னர், தாக்குதல் நடத்திய வியாபாரிகளை கைது செய்யுமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

