வடக்கு ஆளுநராக சாள்ஸ் நியமிக்கப்படவுள்ளது உறுதியாகியுள்ளது
வடக்கு மாகாண ஆளுநராக சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியான திருமதி சார்ள்ஸை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று மாலை ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இதன்படி திருமதி சார்ள்ஸ் விரைவில் வடக்கு ஆளுநராக பதவி ஏற்கவுள்ளார்.
இதேவேளை வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மண் அகழ்வு குறித்தும் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.அது குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

