யாழில் சத்தியா ஞாபகார்த்த சிறுவர் சதுரங்கப் போட்டி!!
அமரர் திருமதி சத்தியலட்சுமி காங்கேயன் (முன்னால் கோட்டக் கல்விப் பணிப்பாளர், நல்லூர்.) அவர்களின் ஞாபகார்த்த சிறுவர் சதுரங்க சுற்றுப்போட்டி எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 6ம், 7ம் திகதிகளில் யாழ் கண்டி வீதியில் Y.M.C.A மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. இப்போட்டி 8,10,12,14 வயதுக்குட்பட்டோர் போட்டிகளாக ஆண்கள் , பெண்கள் என 8 பிரிவுகளாக நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் பங்குபற்ற விரும்புவோர் ‘யாழ் சதுரங்க முற்றம்’ ஒருங்கிணைப்பாளர் திரு. கா. ஆதவன் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு ( 0777256481) கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.