புதினங்களின் சங்கமம்

யாழில் பயங்கரம்!! சிறுவனை கயிற்றில் கட்டி துாக்கில் தொங்கி கொலை செய்ய முயற்சி!!

சிறுவன் ஒருவனை மயக்கமடையவைத்து அவனை கொலை செய்ய இனந்தெரியாதவர்கள் முயற்சித்ததாக
அவனது பெற்றோர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கிராமத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் 6:45
மணியளவில் இடம்பெற்றுள்ளது. எனினும் தெய்வாதீனமாக சிறுவன் தப்பித்துள்ளான்.

சிறுவனது குடும்பம் கட்டைக்காடு தேவாலயத்திற்கு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாலை 4
மணியளவில் சென்று வழிபாடுகள் நிறைவு செய்துவிட்டு மாலை 6.45 மணியளவில் அனைவரும்
வீடு திரும்பியுள்ளனர். எனினும் சிறுவன் வீடு திரும்பவில்லை.

சிறுவன் தேவாலயத்தில் உள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றிவிட்டு 15 நிமிடம் தாமதித்து
வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு தேவாலயத்தில் நின்றுள்ளார். எனினும் நீண்ட நேரமாகியும்
சிறுவன் வீடு திரும்பததால் வழமையாக அம்மம்மா வீட்டுக்கு தொலைக்காட்சி பார்க்கச்
சென்றிருப்பார் என்று குடும்பத்தினர் நினைத்துவிட்டனர்.

இந்த நிலையில் அம்மம்மா வீட்டுக்குச் சென்று பார்த்த போது, சிறுவனது கைகள் மற்றும் கால்கள்
கட்டப்பட்டு கழுத்தை சுற்றியும் துணியால் மிக இறுக்கமாக சுற்றப்பட்டு சுய நினைவின்றி
வீட்டின் பின் பகுதியில் காணப்பட்டுள்ளான். சிறுவனது வாயிற்க்குள்ளும் துணிகள்
திணிக்கப்பட்டிருந்தது.

உடனடியாக சிறுவனை பெற்றோர் மீட்டு 1990 அம்புலன்ஸ் சேவை வண்டியில் கிளிநொச்சி மாவட்ட
மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வைத்தியசாலையில் சிகிசசை பெற்ற சிறுவன்
நேற்று பிற்பகல் வீடு திரும்பினான் என்று அவனது தாயார் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சிறுவன் தெரிவித்ததாவது:

நான் தேவாலயத்தில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது அம்மம்மா வீட்டிற்க்குள் யாரோ
செல்வதை அவதானித்தேன். அவர்களை பின்தொடர்ந்து அங்கு சென்றபோது யாரோ எனக்கு பின்னால்
நின்று எனது மூக்கில் ஏதோ துணியால் பொத்தினார்கள். அதற்கு பின்னர் எனக்கு என்ன நடந்தது
என்று தெரியாது – என்றான்.

மேலும் சிறுவனது அம்மம்மா வீட்டில் சிறுவனை தூக்கில் போடுவதற்க்காக என
சந்தேகிக்கப்படும் வகையில் வீட்டிற்க்குள் கயிறு ஒன்று போடப்பட்டுள்ளதாகவும் சிறுவனின்
தாயர் தெரிவித்தார்.

இது தொடர்பாக கிளிநொச்சி வைத்தியசாலைப் பொலிஸார், பளை பொலிஸார் மற்றும் கிராம சேவகர்
ஆகியோருக்கு முறைப்பாடு செய்யப்பட்டன. எனினும் இதுவரை யாரும் சம்பவம் தொடர்பில்
எந்தவித விசாரணைகளையும் மெற் கொள்ளவில்லை என்றும் பெற்றோர் கவலை தெரிவித்தனர்.