நல்லுார் ஆதினத்தை கைப்பற்றப் போவதாக நித்தியானந்தா அறிவித்தார்!! பதற்றத்தில் ஆதீன முதல்வர்!!
தனது அடுத்த இலக்கு இலங்கையில் உள்ள நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் என்று நித்தியானந்தா வெளிப்படையாக கூறியுள்ளார்.
கடந்த பல நாட்களாக நித்தியானந்தாவின் செய்திகள் அதிகமாக வந்தவண்ணம் உள்ளது. கைலாசா என்ற பெயர் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருந்தது.
நித்தியானந்தா தனது முகப்புத்தகத்தில் வீடியோ வெளியிடுவதன் மூலம் பல தகவல்களை வெளியிட்டு வருகின்றார். அந்த வகையிலேயே தனது முகப்புத்தக காணொளியில் தனது அடுத்த இலக்கு இலங்கையில் உள்ள நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் என்று நித்தியானந்தா வெளிப்படையாக கூறியுள்ளார்.
கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருக்கும் நித்யானந்தா புதிய வீடியோவில் கூறி இருப்பதாவது:-
சிவத்தை உணர்ந்தால் உங்களுக்குள் கைலாசா உருவாகும். என்னுடைய அடுத்த இலக்கு ஸ்ரீலங்காவில் உள்ள நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் தான்.
நான் அரசியல் பற்றி பேச வரவில்லை. ஆனால் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் இந்தியா பொருளாதார ரீதியாக செழிக்கும்.
ஏனெனில் சமூகத்துக்கு பங்களிப்பது தான் ராமரின் கொள்கை. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட யார் நிதி அளித்தாலும் அது இந்திய பொருளாதாரத்துக்கு பங்களிப்பது ஆகும்.
நான் எந்த அமைப்பிலும் இல்லை. எனது சீடர்களும் சந்நியாசிகளும் உங்களால் முடிந்த அளவுக்கு ராமர் கோவில் கட்டுமானத்தில் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நான் எனது வழியில் ராமர் கோவிலுக்கு பங்களிப்பேன். என்னிடம் ஒன்றும் இல்லை என நான் கூறப் போவது இல்லை. லட்சுமி என்னுடன் இருக்கிறாள்.
இவ்வாறு வீடியோவில் பேசிய அவர் திடீரென ராவணனை சாடினார். இது தொடர்பாக அவர் வீடியோவில் கூறியதாவது:-
ராவணன் நேரடியாக கைலாசத்தை தொட்டு தூக்க முயன்றான். கைலாசத்தில் உள்ள சிந்தாமணி மண்டபம் தான் கைலாசத்தின் அருள் பொலிவுக்கு காரணம் என நினைத்தான்.
உடனே எனக்கு அந்த மண்டபம் வேண்டும் என சிவனிடம் கேட்டான். சிவனும் எடுத்துக்கொள் என்று கூறிவிட்டார். இந்த முட்டாள் ராவணனும் அந்த சிந்தாமணி மண்டபத்தை எடுத்து ஸ்ரீலங்காவில் தான் வைத்தான். என தெரிவித்துள்ளார்.
இதேவேளை
நல்லை ஆதீனத்துக்கும் சுவாமி நித்தியானந்தாவுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
“இதனை நாம் சர்ச்சைக்குரிய கருத்தாகவே பார்க்கின்றோம். சுவாமி நித்தியானந்தாவுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்புகளும் இல்லை.எமது இந்து மதப் பணிகளுக்கு இடையூறு வரும் வகையிலும் எமக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டதார்.
இந்தியாவின் சர்ச்சைக்குரியவரான நித்தியானந்த தனது முகநூலில் வெளியிட்டுள்ள காணொலியில் தனது அடுத்து இலக்கு இலங்கையில் உள்ள நல்லை ஆதீனம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதுதொடர்பில் பதிலளிக்கும் போதே நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

