பொதுமக்களுக்கு ஜனாதிபதி செயலகத்தின் முக்கிய அறிவிப்பு!!
ஐனாதிபதி செயலக
பொதுமக்களுக்கான அறிவித்தல்
மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் பெயரை உபயோகித்தும் ஜனாதிபதி செயலகத்தில் பதவி வகிப்பதாக குறிப்பிட்டும் சில நபர்களால் பொதுமக்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுதல், அச்சுறுத்தப்படுதல் மற்றும் தொழில்வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் குறிப்பிடுதல் போன்ற பல்வேறு மோசடி செயல்கள் இடம்பெறுவதாக அறியக் கிடைத்துள்ளது.
இவ்வனைத்து செயற்பாடுகளும் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களினதும் ஜனாதிபதி செயலகத்தினதும் அனுமதியின்றியே இடம்பெற்றுள்ளன என்பதை பொதுமக்களுக்கு தயவுடன் அறியத்தரும் அதேவேளை, அத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் தகவலறியக் கிடைப்பவர்கள் தாமதமின்றி உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் இத்தகைய மோசடிகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம் எனவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
ஜனாதிபதி செயலகம்
2019.12.13


