கோவையில் 6 வயது சிறுமி கொடூர வல்லுறவு!! நேரில் பார்த்த பாட்டியையும் கொன்றானா காமுகன்??
இந்தியா, கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியொருவர் மிகக் கொடூரமான முறையில் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமியின், பிரேத பரிசோதனையில் சிறுமி ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதும் மூச்சுத் திணறலால் உயிரிழந்திருப்பதும் தெரிய வந்தது.
கொலையாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், சிறுமியின் வீட்டை அண்டிய பகுதிகளில் தீவிர விசாரணைகள் நடாத்தப்பட்டது. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிக்கும் நபர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும், பெயர்கள் இரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, துண்டு பிரசுரங்கள் அச்சடித்தும் விநியோகம் செய்துள்ளனர்.
இந்நிலையில், கோவை சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமாரை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, 7 பேரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் அதில் ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தோஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், அவரிடம் தற்போது நடத்திய விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள் கடத்திய, சந்தோஷ், துடியலூர் பணிமுனை அருகே உள்ள பாட்டியின் வீட்டில் தான் சமீப காலமாக வசித்து வந்துள்ளார். கஞ்சாவுக்கு அடிமையான அவர், வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு மேல் கடத்தி வந்து பாட்டின் வீட்டில் அடைத்து வைத்துள்ளார்.
சிறுமி கொலை இதையடுத்து சிறுமியை காயப்படுத்திய சந்தோஷ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது சிறுமிக்கு பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த விஷயம் வெளியே தெரிந்தால் தனக்கு மிகப்பெரிய பிரச்சினை வரும் என அறிந்த சந்தோஷ் சிறுமியை கொன்று, அதிகாலையிலேயே அருகாமையில் உள்ள பகுதியில் வீசிவிட்டு வந்திருக்கிறார்.
குற்றவாளியாக கருதப்படும் சந்தோஷ், மனைவியை பிரிந்தவராவார். அவ்வப்போது வந்து பாட்டியுடன் வசித்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கு முன்பே இரண்டு மூன்று முறை சந்தோஷ் பாலியல் தொல்லை சிறுமிக்கு கொடுத்தாக கூறப்படுகிறது.
மேலும், சம்பவ தினத்தன்றே சந்தோஷின் பாட்டியும் உயிரிழந்துள்ளார். சிறுமியின் பலாத்காரத்தை பார்த்ததால் சந்தோஷே, பாட்டியை கொன்று இருக்கலோமோ என பொலிசார் சந்தேகத்தில் உள்ளனர். எனவே தற்போது விசாரணையை பொலிசார் தீவிரப்படுத்தி வருகிறார்கள்.
மேலும் இவ்வழக்கில், இன்னும் பல உண்மைகள் வெளியாகும் என தெரிகிறது.