பலாங்கொட வைத்தியசாலையில் இனத்துவேசத்தைக் கக்கும் பெண் (Photos)
பலாங்கொடை பொது வைத்தியசாலையில் தமிழ் மக்களை மட்டும் தகாத வார்த்தைகளால் திட்டி, இனத்துவேஷத்தைக் காட்டும் தாதிமாரும், பாதுகாவலர்களும் அதிகம். இதிலும் முக்கியமாக பெண் பாதுகாவலர் (படத்தில் உள்ளவர்) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளைப் பார்வையிடச் செல்லும் தமிழ் பேசும் மக்களைத் தகாத வார்த்தைகளாலும், இனத்தைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் “தெமலு” என்றும் திட்டித்தீர்க்கிறார்.
அதே போல குழந்தைகள் தங்கி சிகிச்சை பெறும் பிரிவில் கட்டாக்காலி நாய்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்த நாய்கள் வைத்தியசாலை கட்டிடத்துக்குள்ளும் ஓடித் திரிவதால், அங்கு தங்கிச் சிகிச்சை பெறும் குழந்தைகள், தாய்மார்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் தெரியவந்துள்ளது. இதைப் பற்றி வைத்தியசாலை பாதுகாவலர்களோ, அதிகாரிகளோ, தாதிமாரோ, வைத்தியர்களோ கவனஞ்செலுத்துவதில்லை.
இப்பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கூறிய விடயங்களைக் கருத்திற்கொண்டு தமிழ் மக்கள் மீது இனத்துவேஷத்தை விஷமாகக் கக்கும் அரச ஊழியர்களையும் கட்டாக்காலி நாய்களோடு சேர்த்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.