புதினங்களின் சங்கமம்

கஞ்சிபானை இம்ரானிடமிருந்து வெளிப்பட்ட பல திடுக்கிடும் உண்மைகள்

டுபாயில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது மாகந்துரே மதூஸ் மற்றும் அவரது சகாக்கள் கைது செய்யப்பட்டனர். சகாக்களில் ஒருவரான கஞ்சிபானை இம்ரான் நேற்று முந்தினம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். அவ்வாறு நாடு கடத்தப்பட்டவரிடம் கொழும்பு சிறைச்சாலையில் வைத்து சி ஐ டியினர் கடுமையான விசாரணைகளை மேற்கொண்டனர்.

அவரிடம் 17 மணித்தியாலங்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணைகளின் போது இடையே அழுதவாறு சமூகம் தான் தன்னை இது போன்ற குற்றவாளியாக மாற்றியது எனவும் தெரிவித்ததாக பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நடை பெற்ற விசாரணை தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அவரிடம் மேற் கொண்ட விசாரணையின் போது பல முக்கிய திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார் எனவும் தெரியவந்துள்ளது. அதாவது இந்த பாரிய சட்ட விரோத குற்றங்களில், பல அரசியல் பிரமுகர்கள், பெரும் வர்த்தகர்கள், அரசாங்க உத்தியோகத்தர் மற்றும் நடிகர்கள் என்போர் ஈடுபட்டுள்ளனர் எனவும், அவர்களின் பெயர்களையும் வெளியிட்டதாகவும் சிறைச்சாலையில் தனக்கு உயர் பாதுகாப்பு வழங்கப்படுமானால் மேலும் பல உண்மைகளை தான்னால் வெளியிட முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதனைவிட கஞ்சிபானை இம்ரான் ஐரோப்பிய நாடொன்றுக்கு கொழும்பு விமானநிலைய ட்ரான்சிட் ஊடாக தப்பி செல்ல உதவியவர்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படுவதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கஞ்சிபானை இம்ரானிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது பெறப்பட்ட தகவல்களின் அறிக்கை மற்றும் அரசியல் பிரமுகர்களின் பெர்கள் என்பன பாதுகாப்பு துறையால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், உடனடியாக கைது நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு பாதுகாப்பு தரப்பிற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.