புதினங்களின் சங்கமம்

யாழ் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தாறுமாறாக கழுத்தை அறுத்த நபரால் பரபரப்பு!!

மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் பிளேட்டால்
தனது கழுத்தை தானே தாறுமாறாக அறுத்து தற்கொலைக்கு முற்சித்த சம்பவம் இடம்பெற்றது.
நேற்று (29) இரவு 8 மணியளவில் அவர் கழுத்தை அறுத்துக் கொண்டார்.

விளக்கமறியல் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த மற்றைய கைதிகள் கூச்சலிட்டதை தொடர்ந்து,
பொலிசார் விரைந்து செயற்பட்டு, கழுத்தறுத்தவரை மீட்டு, யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

உடனடியாக சத்திரசிகிச்சை கூடத்தில் சேர்க்கப்பட்டு காயங்களிற்கு தையலிடப்பட்டுள்ளது.

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் கடந்த மாதம் வீடொன்றுக்குள் புகுந்த ரௌடிகள் சிலர் தீவைத்து,
அடாவடியில் ஈடுபட்டனர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் மூவர் நேற்றுக் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவரே தனது சட்டைப் பைக்குள்ளிலிருந்த பிளேட்டை எடுத்து தனது கழுத்தில் 4,5
முறை தாறுமாறாகக் கீறி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதேவேளை, சந்தேகநபரை கைது செய்தபோது, அவரை சோதனையிட்டு உடமைகளை மீட்டு
பாதுகாப்பாக வைப்பது வழக்கம். எனினும், நேற்று கைது செய்தவர்களை சோதனையிட்டு,
பொருட்களை கைப்பற்றாமல் விட்ட பொலிஸ் உத்தியோகத்தர் துறைசார் ஒழுக்காற்று
விசாரணைக்குள்ளாக்கப்படுவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.