யாழில் டெங்கு தீவிரம்!! இரு இளைஞர்கள் பலி!! பொய் விலாசம் கொடுக்கும் நோயளர்கள்!!(photos)
டெங்கு வைரசினால் மக்கள் பாதிப்படைவதைவிட மக்களின் அறியாமையினாலேயே கூடுதலாக மக்கள் பாதிப்டைகின்றனர்.
டெங்கு என இனங்கானப்பட்டவர்கள் வைத்தியசாலைகளில் போலியான முகவரிகள், தொலைபேசி இலக்கங்களை வழங்குகின்றனர். அத்துடன் அயலவர்களுக்கும் தமது நிலைபற்றி மறைக்கின்றனர்.
மெமோறியல் லேன், மானிப்பாயில் டெங்கு வந்த ஒருவர் வழங்கிய முகவரி உடுவில் றோட் மானிப்பாய் இதனைக்கொண்டு சுகாதார உத்தியோகத்தர்கள் சுகாதார நடவடிக்கைக்காக அலைந்து திரிந்துள்ளனர். தேவையற்ற இந்த காலதாமத்த்தால் மேலும்பலர் பாதிப்கப்பட கூடிய, ஏன் அவர்கள் வீட்டிலேயே பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உருவாகின்றது. பலர் இவ்வாறு செயற்படுகின்றனர். பல்கலைக்கழக பட்டம் பெற்றவர்களே கூட முகவரிகளை மறைக்கின்றனர்.
தயவு செய்து சமூகப்பொறுப்புடன் செயற்படுங்கள்… டெங்குக்கே இப்படியென்றால் எய்ட்ஸ் வந்தால்?
இன்று காலை கூட டெங்கினால் பொன்னாலையில் ஒருவர் இறந்துள்ளார்(ந. கிருஸ்ணகுமார்- (வெள்ளைத்தம்பி))
நன்றி
முகப்புத்தகம்
இதேவேளை கோண்டாவிலிலும் ஒரு இளைஞனும் உயிரிழந்துள்ளததாக தெரியவருகின்றது …

