Home புதினங்களின் சங்கமம் கிளிநொச்சி நாதன் குடியிருப்பில் நடந்த வேட்டை! போதைப்பொருளுடன் ஒருவன் கைது!

கிளிநொச்சி நாதன் குடியிருப்பில் நடந்த வேட்டை! போதைப்பொருளுடன் ஒருவன் கைது!

கிளிநொச்சி – நாதன் குடியிருப்பு பகுதியில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது, நாதன் குடியிருப்பு பகுதியிலுள்ள குளக்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஒருவரை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, அவரிடமிருந்து 2 கிராம் 37 மில்லிகிராம் ஹெரோயின், 1 கிராம் 93 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 22 போதை மாத்திரைகள், கையடக்கத் தொலைபேசி ஒன்று மற்றும் 700 ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (29) கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம். திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments