Home இந்தியச் செய்திகள் ‘உன்னில் துர்நாற்றம் வீசுகின்றது’ பிருத்தானியா ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பயிலும் தமிழ் மாணவிக்கு இவ்வாறு...

‘உன்னில் துர்நாற்றம் வீசுகின்றது’ பிருத்தானியா ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பயிலும் தமிழ் மாணவிக்கு இவ்வாறு கூறியது யார்?

பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பயிலும் காமாட்சி என்ற இந்திய மாணவி அங்குள்ள கடை தொகுதியில் தனக்கு ஏற்பட்ட மனவேதனையான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இது தொடர்பில் கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் திகதி இன்ஸ்டாகிராம் காணொளியில் பகிர்ந்துள்ளார். கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தபோது அறிமுகம் இல்லாத வெள்ளையின பெண் ஒருவர் தன்னை சுற்றி சுற்றி வந்ததை அவர் அவதானித்து உள்ளார். திடீரென அருகில் வந்த அப்பெண் இதை சொல்ல எனக்கு விருப்பமில்லை ஆனால் சொல்லிதான் ஆகவேண்டும் உங்கள் மீது மிகவும் மோசமான துர்நாற்றம் வீசுகின்றது என கூறிவிட்டு உடனடியாக அங்கிருந்து நடந்து சென்றுவிட்டார். அன்றைய தினம் தனது தந்தைக்கு பிடித்த வாசனை திரவியத்தை பூசியிருந்த நிலையில் இந்த கருத்து தன்னை மிகுந்த அதிர்ச்சி அளிக்கும் குழப்பத்திற்கும் உள்ளாக்கியதாக காமாட்சி கூறியுள்ளார். இதனால் அன்றைய நாள் முழுவதும் பொது இடங்களில் தன்னை பிறர் கவனிக்காதவாறு ஒதுங்கி இருக்க முயற்சித்தது ஆகும் அவர் தெரிவித்து உள்ளார். புலம்பெயர்ந்து வாழும் போது எதிர்கொள்ளும் இது போன்ற சிறிய பாகுபாடுகள் மற்றும் அசௌகரியமான நடத்தைகளை அவர் நுண் ஆக்கிரமிப்புகள் என குறிப்பிட்டு உள்ளார். இருப்பினும் நாம் ஒவ்வொரு நாளும் போராடுகின்றோம், தோற்கின்றோம், ஆனால் இந்த உலகை நமக்கானதாக இன்னும் கொஞ்சம் மாற்றிக் கொண்டு இருக்கின்றோம் என்ற தனது நண்பரின் வார்த்தைகளுடன் நம்பிக்கையான செய்தியை அவர் முன்வைத்துள்ளார். அவரது இந்த காணொளிக்கு சமூக வலைத்தள பயனர்கள் பலரிடமிருந்தும் ஆதரவான கருத்துக்கள் குவிந்து வருகின்றன. பலரும் தமது அனுதாபத்தை தெரிவித்ததுடன் முன்பின் தெரியாத ஒருவரிடம் இத்தகைய தனிப்பட்ட கருத்துக்களை கூறிய அப்பெண்ணை கடுமையாக விமர்சித்தும் உள்ளனர். சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து தனது அடையாளத்தையும் தன்னம்பிக்கையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்க வேண்டாம் என ஊக்கமளித்துள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments