மட்டக்களப்பு, கருவப்பங்கேணி பகுதியில் இடம்பெற்ற சோகச் சம்பவம் ஒன்று அப்பகுதி மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வீடொன்றின் மேல் மாடியின் கூரைப்பகுதியில் திருத்தவேலைகளில் ஈடுபட்டிருந்த இருவர், எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அன்றாட ஜீவனோபாயத்திற்காக உழைக்கச் சென்ற இருவரின் உயிரை மின்சாரம் காவுகொண்ட இச்சம்பவம், அவர்களது குடும்பத்தினரையும் உறவினர்களையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





