Home புதினங்களின் சங்கமம் வடக்கு மாகாணப் பாடசாலைகள் நாளை வழமைபோல் இயங்கும்! பரீட்சைகளும் திட்டமிட்டபடி நடைபெறும்!

வடக்கு மாகாணப் பாடசாலைகள் நாளை வழமைபோல் இயங்கும்! பரீட்சைகளும் திட்டமிட்டபடி நடைபெறும்!

வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் நாளை (30.11.2026) இயங்காது என்றும், பரீட்சைகள் நடைபெறாது என்றும் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் வை. ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை திங்கட்கிழமை வட மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளும் வழமைபோல் இயங்குவதுடன், திட்டமிடப்பட்ட பரீட்சைகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டுக்கான கல்விச் செயற்பாடுகளை உரிய காலத்திற்குள் நிறைவு செய்யும் வகையில் கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய பாடசாலைகள் தொடர்ந்து இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உத்தியோகபூர்வ அறிவித்தலுக்கு அமைய செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

உத்தியோகபூர்வ அறிவிப்பு – வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments