Home புதினங்களின் சங்கமம் யாழில் விவாகரத்து வழக்கிற்கு சிறப்பாக வாதாடதால் சர்மினி லோயரிடம் காசை திரும்ப கேட்ட பெண்! கொடுக்க...

யாழில் விவாகரத்து வழக்கிற்கு சிறப்பாக வாதாடதால் சர்மினி லோயரிடம் காசை திரும்ப கேட்ட பெண்! கொடுக்க மறுத்து கன்னத்தை பொத்தி அடித்த சர்மினி! இருவரும் கட்டிப்பிடித்து சண்டை!!பொலிசார் கூறுவது என்ன?

யாழ் கோப்பாய் தெற்குப் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் தனது கணவனை விவாகரத்து செய்வதற்கு முடிவு செய்து அது தொடர்பாக நீதிபதியின் மனைவியான சர்மினி லோயரிடம் சட்டநடவடிக்கைக்காக பல ஆயிரம் ரூபா பணத்தை கொடுத்துள்ளார்.

ஆனாலும் சர்மினி லோயர் அவரது வழக்கிற்கு பல தடவைகள் ஆயராகாது வழக்கை பிற்போட்டு வந்ததால் கடுப்பான குறித்த குடும்பப் பெண் சர்மினி லோயரின் அலுவலகத்திற்கு சென்று சர்மினி லோயருன் வாய்த்தர்க்கம் புரிந்துள்ளார். இதனையடுத்து குறித்த குடும்பப் பெண்ணை சர்மினி லோயர் கன்னத்தைப் பொத்தி அடித்ததாகத் தெரியவருகின்றது.

இந் நிலையில் குறித்த குடும்பப் பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பொலிசாரிடமும் முறையிட்டுள்ளார். சர்மினி லோயரை பொலிசார் கைது செய்ய ஆயத்தமான போது, பொலிஸ்  அதிகாரியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட சர்மனி லோயர் அவளும் எனக்கு அடித்தவள் என முறையிட்டு தாக்குதலுக்கு உள்ளான பெண்ணையும் சிறையில் தள்ள முற்பட்பட்டதாகத் தெரியவருகின்றது. இருந்த போதும் இருவரும் தமக்கிடையே தாக்குதல் நடாத்தியதாக கூறி குறித்த குடும்பப் பெண்ணை சமாதானமாகச் செல்லுமாறு பொலிஸ் அதிகாரிியின் அறிவுறுத்தலுக்கு அமையா முறைப்பாடு பெற்ற பொலிசார் கூறியுள்ளனராம்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments