கிளிநொச்சியில் 14 வயதுச் சிறுமிக்கு மதுபானம் வழங்கிப் பாலியல் வன்கொடுமை – 19 வயது காவாலி கைது!
கிளிநொச்சியில் 14 வயதுச் சிறுமிக்கு மதுபானம் வழங்கி, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 19 வயது காவாலி ஒருவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி – திருவையாறு பகுதியைச் சேர்ந்த சிறுமி, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அருகில் நின்றுகொண்டிருந்தபோது, அவரை ஏமாற்றி அழைத்துச் சென்று குறித்த வன்கொடுமை இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நகரில் விசா அலுவலகம் ஒன்றை நடத்திவரும் காவாலியே இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் நிலையில், அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




